சிறைச்சாலைகளிலுள்ள வைத்தியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சினூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள சில வைத்தியர்கள் இலஞ்சம் பெற்றுக்கொள்வதாக வெளியாகியுள்ள தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் விசாரணைக் குழுவினூடாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வைத்தியர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து உறுதிப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம தெரிவித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வைத்தியர்களின் செயற்பாடுகள் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தினூடாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். விளக்கமறியலில் வைக்கப்படும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட சில சந்தேகநபர்களிடம் சிறைச்சாலை வைத்தியர்கள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.