தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அரசு ஊழியர் போராட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று சங்கத்தின் மாநில தலைவர் கே. கணேசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கத்தின் சார்பில் 7-வது ஊதியக்குழு அமைக்க வேண்டும், தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (10-ந் தேதி) சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி இந்த போராட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று சங்கத்தின் மாநில தலைவர் கே. கணேசன் தெரிவித்தார்.