தமிழ்மாநில காங்கிரஸ் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் – ஜிகே வாசன் அறிவிப்பு

205 0

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் போதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.
இதற்கிடையில், பல்வேறு கட்சிகளும் தங்கள் கூட்டணி, போட்டியிடும் தொகுதி, சின்னம் தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் தான் உள்ளது என த.மா.கா. கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த த.மா.க. தலைவர் ஜிகே வாசன், ‘ அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்’ என்றார்.
முன்னதாக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, விடுதலை சிறுத்தை ஆகிய கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.