யாழிலும் பால்முறை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு(படங்கள்)

343 0

jaffna-4சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான வன்முறைகளைத்தடுப்பதற்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக விழிப்புணர்வுகளை மேற்கொள்ளவேண்டும் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பெண்கள் மற்றும் சிறுவர் தொடர்பான விழிப்புணர்வு ஊடக அலுவலர் றிசெல் ஒகாரா தெரிவித்தார்.

வன்முறையற்ற மகிழ்வான குடும்பம் எனும் தொனிப்பொருளில் பால்முறை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாணம் நாவலர் கலசாசார மண்டபத்தில் இடம்பெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பலவகையான வன்முறைகளுக்கு உடபடுத்தப்பட்டு வந்தனர் எனவே வன்முறைகளிலிருந்து விடுவிப்பதற்கு ஒவ்வொரு மனிதனும் செயற்பட வேண்டும் என்றும் இதன் போது இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பெண்கள் மற்றும் சிறுவர் தொடர்பான விழிப்புணர்வு ஊடக அலுவலர் றிசெல் ஒகாரா கேட்டுக்கொண்டார்.

கார்த்திகை 25 தொடக்கம் மார்களி 10 வரையான 16 நாள்கள் இடம்பெறும் விழிப்புணர்வு நிகழ்வில் இன்றையதினம் விரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மகளிர் அபிவிருத்தி நலையத்தின் நிர்வாக இயக்குனர் சரோஜா சிவச்சந்திரன், கௌரவ விருந்தினராக பெண்கள் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் உதயனி நவரட்ணம் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

jaffna jaffna-4 jaffna-3 jaffna-2 jaffna-1