இலங்கையில் சுமார் 90 ஆயிரம் பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

213 0

இலங்கையில் சுமார் 90 ஆயிரம் பேர் தங்களது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளனர் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள அவர், நாட்டில் காத்தான்குடி, அவிசாவெல்ல, ருவன்வெல்ல உள்ளிட்ட ஒன்பது பொலிஸ் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைவிட்டு வெளியேற எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதுடன், குறித்த பகுதிகளுக்கு வெளியில் இருந்து எவரும் உள்ளே செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2021ஆம் ஆண்டின் முதலாவது ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம், பொதுமக்கள் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.