கட்டபொம்மன் பிறந்தநாள்- டி.டி.வி. தினகரன் டுவிட்டரில் வாழ்த்து

247 0

அதிகாரத்துக்கு அஞ்சாமல் கடைசி வரை நெஞ்சு நிமிர்த்தி களத்தில் நின்ற கட்டபொம்மன், தாய் நாட்டுக்காக செய்த தியாகத்தை என்றைக்கும் நினைவு கூர்ந்து வணங்குவோம் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது

அடிமை விலங்கொடிக்க போரிட்டு, ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் இன்று. அதிகாரத்துக்கு அஞ்சாமல் கடைசி வரை நெஞ்சு நிமிர்த்தி களத்தில் நின்ற அந்த மாவீரர், தாய் நாட்டுக்காக செய்த தியாகத்தை என்றைக்கும் நினைவு கூர்ந்து வணங்குவோம்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.