கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைகளுக்கெதிரான 16ஆம் நாள் செயற்திட்டத்தினையொட்டிய விழிப்புணர்வு நிகழ்வும், பதிவுத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
பால்நிலை வன்முறைகளுக்கெதிரான 16 நாள் செயற்திட்டத்தினையொட்டிய விழிப்புணர்வு நிகழ்வுகள் கடந்த கார்திகை 25ஆம் திகதி முதல் நாளை 10ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.
இதற்கமைய கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரும் சமய முறைப்படி திருமணம் செய்து குடும்பமாக இணைந்து பதிவுத்திருமணம் செய்யாது வாழ்ந்த குடும்பங்களுக்கான பதிவுத் திருமணம் செய்துவைக்கும் நிகழ்வு, இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து விழிப்புணர்வுச் செயற்பாடுகள் கிளிநொச்சி நகரின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.