வடக்கில் இராணுவத்தினர் வசமிருக்கும் மேலும்பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்,
“இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 4600 ஏக்கர் பகுதி கடந்த ஒருவருடகாலப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. இராணுவம் வசமிருக்கும் இன்னும் பல ஏக்கர் காணிகள் வெகுவிரைவில் விடுவிக்கப்படவுள்ளன. குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டால் அதில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்க முடியும். அத்துடன் வடக்கில் விவசாயிகள், மீனவர்கள் இதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.