கொழும்பில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடு(படங்கள்)

280 0

ulal-1சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடு இன்று நடைபெற்றது.குறித்த நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

இங்கு பிரதான அமர்வாக தேர்தல் பிரச்சரங்கள் மூலம் ஏற்பாடும் ஊழல் எனும் தலைப்பில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய நடத்திய இந்த அமர்வில் ஜனாதிபதியும் கலந்துகொண்டார்.இதன்போது ஊழல் எதிர்ப்பு தொடர்பான சித்திர கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

அமைச்சர்கள், அரச ஊழியர்கர் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் என 800 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ulal-4 ulal-3 ulal ulal-2