கைகழுவும் திரவியங்களை பதிவு செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

208 0

தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபையினால் பதிவு செய்யாத கைகழுவும் திரவியங்கள் தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை விசேட ஒழுங்கு முறைகளை விதித்துள்ளது.

அதன்படி, அதிகார சபைக்குள்ள அதிகாரத்திற்கு அமைய அவ்வாறான திரவியங்களை விற்பனை செய்வது, தயாரிப்பது, விநியோகிப்பது உள்ளிட்டவற்றை தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் கீழ் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

அதிகார சபையினால் வழங்கப்படும் இலக்கங்கள் இல்லாத எந்தவொரு திரவியத்தையும் விற்பனை செய்ய முடியாது. இவ்வாறு பதிவு செய்யப்படாத கைகழுவும் திரவியங்களை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி செய்தல், களஞ்சியப்படுத்தல்,

விநியோகித்தல் அல்லது மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த நடைமுறை அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வருகிறது.