பௌத்த மதத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற வடமாகாண சபையை கலையுங்கள் – ஜாதிக ஹெல உறுமய

288 0

jathika-hela-urumayaபௌத்த மதத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற வடமாகாண சபையை கலைத்துவிடுமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.

வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தினால் ஒட்டுமொத்த அரசியல் யாப்பும் மீறப்பட்டிருப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

தமிழர் தாயகப் பகுதிகளில் அநாவசியமாகவும், வலுக்கட்டாயமாகவும் புத்தர் சிலைகளும், விகாரைகளும் அமைக்கப்படுவதற்கு எதிராக வடமாகாண சபையில் தீர்மானமொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தென்னிலங்கையிலுள்ள பேரினவாதக் குழுக்களும், அரச தரப்பினரும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினமும் இதுகுறித்து காரசாரமான விவாதங்களும் இடம்பெற்ற நிலையில் வடமாகாண சபையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜாதிக ஹெல உறுமய இன்றைய தினம் முறைப்பாடு செய்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமாக பேராசிரியர் நிசாந்த வர்ணசிங்க தலைமையில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டது.

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்ற ஜாதிக ஹெல உறுமய குழுவினரிடம் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதிகூட இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் போடுவதாக தெரிவித்திருந்தார்.

எனினும் வடமாகாண சபையின் தீர்மானத்திற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பேச்சாளர் நிசாந்த வர்ணசிங்க, நீதியமைச்சரின் இந்தக் கருத்துக்கு தமது கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

“மாகாண சபைகளால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை குப்பையில் இடுவதாகவும்இ அவற்றில் பயனில்லை என்றும் நீதியமைச்சர் கூறியிருக்கின்றார். எனவே மாகாண சபைகளினால் பயனில்லை என்றால் ஏன் இந்த முறைமையை வைத்திருக்கின்றீர்கள்? உடனே கலைத்துவிடுங்கள். இது வெள்ளை யானை. நாட்டின் ஐக்கியத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் செயற்பட்டுவருகின்ற வடமாகாண சபைக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய என்ற வகையில் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கின்றோம்” – என்று தெரிவித்தார்

download-1 download-2 download-3 download