வடக்கின் அபிவிருத்திக்கு தடையாக அமைவது மாகாண சபையில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுகிடையில் நிலவும் இழுபறி நிலைமையே

260 0

download-2வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாகாண சபைக்கும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் நிலவும் இழுபறி நிலைமையே தடங்கலாக உள்ளது என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு கழநிலை விவாதத்தில் உரையாற்றியபாதே அமைச்சர் ஹரிசன் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவையான நெல் களஞ்சியசாலையொன்றை அமைப்பதற்கு 350 இலட்சம் ரூபாவை கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு என்ற வகையில் நாம் ஒதுக்கினோம். மாவட்டத்தின் அதிகாரிகளின் செயற்றிறன் இன்மையாலும் அரசியல் கருத்துவேறுபாடுகளினாலும் இன்று வரையும் கூட அதை எம்மால் செய்யமுடியாதுபோயுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுமார் 85 மில்லியன் ரூபா செலவிட்டு கிளிநொச்சி நகரம் அருகில் பொருளாதா மத்திய நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாகாண சபையின் எதிர்ப்பின் காரணமாக அந்த பொருளாதார மத்திய நிலையத்தை இதுவரையும் திறக்க முடியாமலேயே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.அதுமட்டுமன்றி வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது குறித்தும் பிரச்சினைகள் ஏற்பட்டன என்றும் அமைச்சர் பி.ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.