விகாரைகள் அமைக்கப்படுவதை வடமாகாண சபை எதிர்க்கவில்லை. அடாத்தாக அமைக்கப்படுவதையே எதிர்க்கிறோம்- சீ.வி.கே.சிவஞானம்

297 0

download-1வடக்கில் பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதை வடமாகாண சபை எதிர்க்கவில்லை. அடாத்தாக அமைக்கப்படுவதையே எதிர்க்கிறோம் என வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.
வடக்கில் பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதை வடமாகாணசபை எதிர்ப்பதாகவும், அதற்கு மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை போன்ற வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியிருந்தார்.இந்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு வடமாகாணச பை பேரவை செயலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.மேலும் அவர் குறிப்பிடுகையில்,

வடமாகாண சபையின் 66ம் அமர்வில் வடக்கில் நடப்பதற்கு ஒப்பாக கிழக்கிலும் தனியார் காணிகளில் விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாகவும்,கிழக்கு மாகாணத்தில் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மதவாதம், இனவாதம் ஆகியவற்றை தூண்டும் வகையில் செயற்படும் நிலையில் அது இன ஐக்கியத்தை பாதிக்கும் என்பதால் குறித்த விகாராதிபதி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ஐனாதிப தி மற்றும் பிரதமர் ஆகியோரை கேட்பதாகவே அமைந்துள்ளது.

இதனை தெற்கில் உள்ள மக்களும், அரசியல் வாதிகளும், புத்தசாசன அமைச்சரு ம் விளங்கி கொள்ள வேண்டும்.மேலும் ஒரு பிரேரணை சபையில் அங்கீகரிக்கப்பட்டதன் பின் அது சபையின் பிரேரணையாகும். அது தனி நபர்கள் சாராது.அதேபோல் புத்தசாசன அ மைச்சர் எம் நம்பிக்கைக்கு உரியவர் என்ற அடிப்படையில் எம்மோடு இந்த விடயம் தொடர்பாக பேசியிருக்க முடியும்.

வடமாகாண சபை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாதம், மதவாதம் ஆகியவற்றை தூண்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியது இல்லை எதிர்காலத்திலும் நிறைவேற்றபடாது என்றார்.