அரச இரசாயண பகுப்பாய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள இறந்து கிடந்த பறவைகளின் உடற்கூறுகள்

244 0

வில்பத்து தேசிய பூங்கா எல்லையில் உள்ள வனாத்துவில்லு – ராலமடுவ நெல் வயலில் இறந்து கிடந்த பறவைகளின் உடற்கூறுகள் அரச இரசாயண பகுப்பாய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பறவைகளின் உடலில் விஷம் கலந்துள்ளதா? என்பதை அறிய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வனவிலங்கு துறையின் கால்நடை மருத்துவர் இசுரு கோட்டெகோட  தெரிவித்தார்.

பறவைகள் காய்ச்சல் நோயால் குறித்தப்பறவைகள் பாதிக்கப்படவில்லை என்பது நேற்று மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வனாத்தவில்லு – ராலமடுவ நெல் வயலில் சுமார் ஆயிரம் பறவைகள் வரையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தன.

அவற்றுள், நெற்குருவி, காகம் போன்ற சிறிய பறவைகளும் இருந்தன.

இருப்பினும், பறவைகள் இறப்பதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.