முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை

284 0

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு செய்யும் போது தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி பாரளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

´த ஹிந்து´ பத்திரிகையுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எமது கட்சிக்கு களுத்துறை மற்றும் நுவரெலியாவுக்கு வேட்பாளர்கள் கிடைக்கவில்லை.

கம்பஹாவிற்கு ஒன்று கிடைத்தது. குருணாகலைக்கு இரண்டு கிடைத்தது. எமக்கு நியாயமான வேட்பாளர்கள் கிடைக்கவில்லை.

நாம் 30 வேட்பாளர்களை கோரினோம். எனினும் கிடைக்கவில்லை. இல்லையென்றால் எமது கட்சியை சேர்ந்த 30 பேர் பாராளுமன்றம் சென்றிருப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடவே எதிர்பார்த்துள்ளோம். எமக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஆசனங்கள் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளோம்.

எமக்கு அது கிடைத்தால் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் நியாயம் கிடைக்கவில்லை என்றால் தனியாக போட்டியிட எமது கட்சி முடிவெடுக்கும். இரண்டிற்கும் நாம் தயாராகவே உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொவிட் தொற்றால் உயிரிழக்கும் மக்களது உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ள நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் இந்த நிலைப்பாட்டுக்கு இணங்குவதாக கூறியுள்ளார்.