எங்களுடைய பிரச்சினைகளை மட்டும் பார்த்து கொண்டிருக்க முடியாது. முழு நாட்டினதும் நிலையை சிந்திக்க வேண்டும்- சீ.வி.விக்னேஸ்வரன்

303 0

downloadஇலங்கை பெற்றிருக்கும் வெளிநாட்டு கடன்களுக்கான வட்டி இந்த நாட்டின் மொத்த வருமானத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். அந்த கடன்களை மீள செலுத்தி முடிப்பதற்கு 2028ம்இ 2030ம் ஆண்டு வரை காலம் தேவை என கருதுகிறேன்.இந்நிலையில் நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை மட்டும் பார்த்து கொண்டிருக்க முடியாது. முழு நாட்டினதும் நிலையை சிந்திக்க வேண்டும்.மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

வடமாகாண சபையின் 2 017ம் ஆண்டுக்குரிய பாதீட்டு ஒதுக்கீடு போதாது என கூறப்படும் நிலையில் மேற்படி விடயம் தொடர்பாக முதலமைச்சரிடம் நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
எமக்கு மூலதன ஒதுக்கீடு 2013ம்இ 2014ம்இ 2015ம் ஆண்டுகளில் 1500 மில்லியனை தொட்டதாக இருந்தது. 2016ல் 3600 மில்லியனை தொட்டதாக இருந்தது.

கையில் கிடைத்தது 900 மில்லியனே. அண்மையில் ஜனாதிபதியை மாகாண முதலமைச்சர்கள் சந்தித்தபோது 1500 தொடக்கம் 2 ஆயிரம் மில்லியன் நிதி தேவை என்பதை கூறியிருக்கின்றேன். மேலும் வேலைகள் நடந்திருக்கின்றன.அந்த வேலைகளுக்கான நிதி கிடைக்கவில்லை. என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.
அதேவேளை இலங்கை வெளிநாடுகளில் இருந்து பெற்றிருக்கும் கடன்களுக்கான வட்டி இந்த நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமாகும்.

அந்த கடன்களை மீள செலுத்துவதற்கு 2028ம்இ 2030ம் ஆண்டு வரையில் காலம் தேவைப்படும்.
எனவே அந்த கடன்களையும் மீள செலுத்தவேண்டியதாக இருக்கின்றது. நாங்கள் தனியே எங்களுடைய பிரச்சினைகளை மட்டும் பார்த்து கொண்டிருக்க முடியாது.

ஒட்டுமொத்தமாக நாட்டினுடைய நலன்களையும் பார்த்துக் கொள்ளவேண்டிய அவசியம் இருக்கின்றது. அதற்காக எங்களுக்கு கிடைக்கவேண்டிய சில விடயங்கள் மற்றும் நிதிகளை கேட்க கூடாது என அர்த்தமில்லை. அவற்றையும் கேட்டு பெற்றுக்கொள்ளவே வேண்டும்.

மேலும் 2017ம் ஆண்டுக்குரிய பாதீட்டு ஒதுக்கீடு போதுமானதா? என கேட்டால் நிச்சயமாக போதாது.
நாங்கள் கே ட்ட தொகையில் மூன்றில் ஒரு பங்கு நிதியே எமக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 2016ல் கூட வழங்கப்பட்ட நிதியில் மூன்றில் ஒரு பங்கே எமது கைகளில் கிடைத்திருக்கின்றது.இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றன. அதனையும் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.