அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

432 0

பயணம் தொடர்கிறது

இலக்கை நோக்கி நடக்கத் தொடங்கு.

நீண்டதொலைவானாலும் நெடுமூச்சு எறியாதே!

என்னால் எப்படி இயலுமென்று

ஏங்காதே.

எத்தனை யுகங்களானாலும்

இலக்கு உன்னை நோக்கி நகராது

எனவே,

இலக்கை  நோக்கி நகரத் தொடங்கு.

புலிகளைப் பார்

பத்தாண்டுகளுக்குள்,

எவ்வளவு தூரம் பாய்ந்து விட்டார்கள்!

கடக்க வேண்டியது நெருப்பாறு என்றார்கள்.

அதற்குள்ளும் துணிந்து காலை வைத்தார்கள்.

பாதிதூரத்தைக் கடந்துபயணம் தொடர்கிறது.

வழியை அடைத்துக் கொண்டு

மலைகள் நின்றன.

போகும் வழியெங்கும் புயலடித்தது.

பேரிடியோடு மழை பொழிந்தது.

எரிமலை உருகிக் கால்களைச் சுட்டது.

என்றாலும்

பாதை பிசகாத பயணம் தொடர்கிறது.

உன்னைப் புலியாக உருவகித்துக் கொள்

இலக்கை நோக்கி நடக்கத் தொடங்கு!

– தமிழீழத்தேசிய கவி புதுவை இரத்தினதுரை அவர்களால் கவியாக்கம்-செய்யபட்ட இக்கவிதையை எமது வாசகர்களுக்கு மீள் வெளியீடு செய்வதில் குறியீடு தமிழ்த் தேசிய ஊடகம் பெரு உவகை கொள்கிறது.