யுத்தக் காலத்தில் தேசிய அடையாள அட்டையைப் போன்று தற்போது முகக்கவசம் அவசியம் – லதாகரன்

224 0

யுத்தக் காலத்தில் எமக்கு தேசிய அடையாள அட்டை எவ்வளவு முக்கியமாக இருந்ததோ, அதைவிட முக்கியமானது தற்பொழுது முகக்கவசம் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் வெளியில் செல்லும்போது தங்களது முகக் கவசங்களை சரியான முறையில் அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஏனெனில் பலர் தங்களது தாடையின் கீழ் முகக்கவசத்தை அணிந்து செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

உடம்பில் இருக்கின்ற மூன்று பகுதிகள் கொரோனா கிருமி நுழையக்கூடிய பகுதிகளாக இருக்கின்றது. ஒன்று கண், இரண்டாவது மூக்கு, மூன்றாவது வாய் ஆகவே நாங்கள் முகக்கவசத்தை சரியான முறையில் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தனிநபர் இடைவெளிகளை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இரண்டு நபர்கள் சேர்ந்து கதைக்குபோது, கண்டிப்பாக சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.