“வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு” மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயலமர்iவான்றினை இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
“ஏனையோரின் உரிமைக்காக இன்றே எழுவோம்” எனும் தொனிப்பொருளில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எம்.ஆர்.பிரியதர்சன தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியாவை சேர்ந்த பொது மக்கள், மாணவர்கள், தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இடம்பெற்ற இச் செயலமர்வில் மனித உரிமைகள் தொடர்பான விளக்கங்கள் துறை சார்ந்த வளவாளர்களால் வழங்கப்பட்டிருந்தது.