வவுனியாவில் ஏ-9 வீதியின் நடுவில் அமர்ந்திருந்து போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பெண்னொருவர் தாக்கியதாக தெரிவித்து இளம்பெண்னொருவர் நடுவீதியில் அமர்ந்தமையினால் ஏ-9 வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
தனது வீட்டில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக இளம் பெண்னொருவரை மற்றுமொரு பெண் தாக்கியுள்ளார்.
இதன் காரணமாக அவ்விடத்தில் பொதுமக்கள் கூடவே தாக்குதலுக்குள்ளான பெண் ஏ-9 விதியின் நடுவில் அமர்ந்து தனக்கு நியாயம் கோரினார்.
இதன் காரணமாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் போக்குவரத்து பணியை சீர் செய்திருந்தனர்.
இந் நிலையில் அங்கிருந்தவர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் தாமதமாக வந்த பொலிசார் அப்பெண்ணை அங்கிருந்து அகற்ற முயற்சித்தபோதும் அப்பெண் ஒத்துழைக்காமையினால் பெண் பொலிசார் வரவளைக்கப்பட்ட நிலையில் அப்பெண்ணை கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.