சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் தின நிகழ்வு நடைபெற்றது.
வடபிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில் ‘ஏனையோரின் உரிமைக்காக இன்றே குரல் கொடும்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று யாழப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாணம் சமாதானத்திற்கும், நல்லிணக்கத்திற்குமான செயலகத்தின் செயலாளர் எஸ்.பரமநாதன், நலன்புரி நிலையங்களின் இணைப்பாளரும் நலன்புரி நிலையங்களுக்கான பொதுத் தலைவருமான எஸ்.அன்ரன் குயின் மற்றும் சிவில் சமூக மற்றும் பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுபாஜினி கிசோர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.