கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று நாளை கிளிநொச்சி கந்தசாமி கோவிலடியில் நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களின் சங்கம் மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் இணைந்து முன்னெடுக்கவுள்ள இக்கவனயீர்ப்பு நிகழ்வில், அனைவரும் கலந்துகொண்டு மனித உரிமைகள் பேணலை உறுதிசெய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.