யாழ். மாநகர முதல்வராக மணிவண்ணன் தெரிவு-மேலதிக இணைப்பு.

469 0

யாழ்.மாநகர முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் விட ஒரு மேலதிக வாக்கைப் பெற்று மேயராக தெரிவாகியுள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான யாழ்ப்பாணம் மாநகரசபையின் அமர்வில், முதல்வரைத் தெரிவு செயவதற்கான அறிவிப்பு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நியமன உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன், 21 வாக்குகளைப் பெற்று முதல்வராகத் தெரிவானார். எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான ஆனல்ட் 20 வாக்குகளைப் பெற்றார்.

தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

அன்று தோழர் மணி இப்படித்தான் கூறியிருந்தார் ஆனால் இன்று அவர் யார் என்பதனை காலம் வெளிப்படுத்தியுள்ளது.

EPDPயின் ஆதரவுடன் யாழ் மாநகர சபையின் புதிய முதல்வராக “தோழர் “மணி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தன் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் யாழ்.நகர மேயர் கெளரவ தோழர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்குத் தமது கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தமையை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தினார்.