இந்தியாவுடனான மோதல் சீனாவுக்கு நல்லதல்ல என்று விமானப்படை தளபதி கே.எஸ்.பதாரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா நேற்று தேசப் பாதுகாப்பு சவால்கள் மற்றும் விமானப்படையின் பலம் என்ற இணையவழி கருத்தரங்கில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா-சீனா இடையிலான எந்த ஒரு தீவிரமான மோதலும் உலக அரங்கில் சீனாவுக்கு நல்லதல்ல. சீனாவின் விருப்பங்கள் என்பது உலகளாவியதாக இருந்தால் அது அந்த நாட்டின் திட்டங்களுக்கு உகந்தது அல்ல.
வடக்கில் சீனாவின் நோக்கம் என்னவாக இருக்கிறது? அவர்கள் அங்கு சாதித்ததை நாம் அங்கீகரிக்க வேண்டியது அவசியம். எல்லையில் அதிகளவில் சீனா துருப்புகளை குவித்து இருக்கிறது. அதற்கு எதிராக நாமும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம் என தெரிவித்தார்.