ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் புனர்மைப்பு பணிகளுக்கான முதலாவது திட்டத்திற்குறிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மற்றும் சீனா மேசர்ண்ட் ஹோல்டிங் நிறுவனத்திற்கும் இடையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதிப்படி இலங்கை அரச தரப்பு சார்பாக, நிதி அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் கப்பல் அமைச்சு மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சு போன்ற அமைச்சுக்களின் செயலாளர்கள் இவ் உடன்படிக்கையில் ஒப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர் ஆரம்பித்த சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ந்து இடம்பெறுகிறது. தம்மை துறைமுக அதிகாரசபையில் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.