10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

302 0

50088777harisonநாட்டில் நிலவுகின்ற அரிசி தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ.ஹெரிசன் கூறினார்.

சில வியாபாரிகள் அரிசிகளை பதுக்கி வைத்துக் கொண்டு விலையை அதிகரித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அரசதுறை வர்த்தக நிலையங்களில் அரிசியின் விலை 10 ரூபா முதல் 15 ரூபா வரையான அளவு விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் பொதுச்சந்தைகளில் உள்ள கடைகளிலும் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

வருகின்ற நத்தார் சமயத்தில் அதிகளவில் நுகர்வோர் அரிசி கொள்வனவு செய்ய உள்ளதால் அரசு தலையீடு செய்யாவிட்டால் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.