பைசர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது இலங்கை

200 0

கொரோன வைரஸ் மருந்தினை தயாரித்துள்ள பைசர் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
தனியார் நிறுவனமொன்று இந்த பேச்சுவார்த்தைகளிற்கு உதவியுள்ளதுடன் மருந்துவிநியோகம் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்வந்துள்ளதை தொடர்ந்தே இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.

பைசர் மற்றும் அஸ்டிராஜெனேகாவிற்கானஇலங்கை முகவரான ஹேமாஸ் பார்மசூட்டிக்கல் நிறுவனம் பைசர் நிறுவனத்திற்கும் சுகாதார அமைச்சிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளிற்கு உதவியுள்ளதாக தெரிவித்துள்ளது என டெய்லிமிரர் குறிப்பிட்டுள்ளது.
ஹேமாஸ் பார்மசூட்டிக்கல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளா ஜூட் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

மருந்தினை மிகச்சிறப்பாக விநியோகிப்பதற்கான சாத்தியமான சிறந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பைசர் நிறுவனமே கொரோனாவைரஸ் மருந்துகள் விவகாரத்தில் முன்னணியில் காணப்படுகின்றது இதன் காரணமாக அந்த நிறுவனத்திடமிருந்து மருந்தினை பெறுவதற்கான யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விநியோகம் போன்ற விடயங்களை கையாள்வதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் நடைமுறையொன்றை பின்பற்றவேண்டும், உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவேண்டும் எனதெரிவித்துள்ள ஜூட் பெர்hணன்டோ உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதும் இரு தரப்பினரும் விபரங்களை பரிமாறிக்கொள்வார்கள் என குறி;ப்பிட்டுள்ளார்.

மருந்தின் தேவையான அளவு மற்றும் திகதி குறித்து இரு தரப்பும் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள அவர் தனியார் துறையினர் மருந்தினை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படாததால் நாங்கள் கொரோனா மருந்தினை இறக்குமதி செய்யமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்தும் சிறப்பாக இடம்பெற்றால் அடுத்த வருடத்தின் இரண்டாவது மூன்றாவது காலாண்டு பகுதிக்குள் இலங்கைக்கு மருந்தினை வழங்கமுடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.