சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உஸ்பெகிஸ்தான் 27 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கியுள்ளது.
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உஸ்பெகிஸ்தான் 27 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, இங்கிலாந்து, ஜெர்மனி, டென்மார்க், ஸ்பெயின், இத்தாலி, கனடா, லூசம்பர்க், நெதர்லாந்து, கொரிய குடியரசு, சிங்கப்பூர், பின்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய 15 நாடுகளின் குடிமக்களுக்கு இலவச சுற்றுலா விசா அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெல்ஜியம், இந்தோனேசியா, சீனா, மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், வியட்நாம், இஸ்ரேல், போலந்து, ஹங்கேரி, போர்ச்சுகல், செக்குடியரசு ஆகிய 12 நாடுகளை சேர்ந்த 55 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டும் இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சுற்றுலா பயன்பாட்டுக்காக உஸ்பெகிஸ்தானில் 30 நாட்கள் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான உத்தரவை உஸ்பெகிஸ்தான் புதிய அதிபர் ஷவ்கத் மிர்ஷியோ யேவ் பிறப்பித்துள்ளார். அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணுவதற்காக அதிபர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.