கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தகனம் : பிக்குகள் – பொலிஸாருக்கிடையில் பதற்ற நிலை

219 0

ஜனாதிபதி செயலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பிக்குகள் மற்றும் பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை அடுத்து அந்த இடத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்தவர்களின் முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக பௌத்த பிக்குகள் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி செயலகம் அருகே போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இந்நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறித்த இடத்திற்கு வருகை தந்தமையை அடுத்து, பிக்குகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்யும் முறைக்கு தடை விதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மனுவை ஒன்றினை கையளித்தனர்.

இலங்கையில் வர்த்தமானி செய்யப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி, கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் உடல்கள் இறந்த 24 மணி நேரத்திற்குள் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் மத நம்பிக்கைகளுக்கு எதிரான அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்களும் சர்வதேச சமூகம் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் என பலர் கவலை தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், இந்த விடயம் தொடர்பாக அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து அடக்கம் செய்வதற்கான செயல்முறைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.