ரின் மீன் கொள்கலன்களை திருப்பி அனுப்பும் செயற்பாடுகள் தாமதம்

184 0

ஆர்செனிக் கலந்திருப்பதால் நிராகரிக்கப்பட்ட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன் கொள்கலன்களை திருப்பி அனுப்பும் செயற்பாடுகள் தாமதமாகியுள்ளன.

இலங்கை சுங்கத்துறை திணைக்களம் இதனைத்தெரிவித்துள்ளது.

குறித்த ரின்மீன்கள் அடங்கிய 48 கொள்கலன்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

எனினும் அவை நுகர்வுக்கு தகுதியற்றது என்பதை இலங்கை தர நிரணய சபை உறுதிப்படுத்தியது.

384 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 760 மெட்ரிக் டன் எடையுள்ள குறித்த ரின் மீண்களை சீனாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அதன் ஒரு பகுதி சமீபத்தில் சீனாவுக்கு அனுப்பப்பட்டது.

கப்பல்கள் போக்குவரத்துல் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, எஞ்சியுள்ளவற்றை மீளேற்றுமதி செய்யும் செயற்பாடுகளும் தாமதித்திருப்பதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.