வர்த்தக அமைச்சின் கீழ் செயற்படும் லங்கா சதொசா நிறுவனத்தின் தலைவராக இருந்த நுஷாத் பெரேரா, சதோசாவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அதிக வேலைப்பளு காரணமாகவே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
தான் லங்கா சதொசா சூப்பர்மார்க்கெட் நெட்வொர்க்கின் தலைவராகவும், சதொசா (லொறிகள் மற்றும் களஞ்சியசாலை)) தலைவராகவும் செயற்பட்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் கடந்த நவம்பர் மாதத்திலேயே சதொசாவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தாக அவர் கூறியுள்ளார்.
எனினும் நேற்றைய தினமே சதொசா நிறுவன தலைவர் பதவியில் இருந்து நுஷhத் பெரேரா விலக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பந்துல குணவர்தன அவரை பதவியில் இருந்து விலக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
அதற்கமைய வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தன (CWE) நிறுவனத்தின் மேலதிக செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.