குளவி கொட்டுதலுக்கு இலக்கான அறுவர் வைத்தியசாலையில்..!

217 0

பசறை – வெல்கொல்ல பகுதியில் குளவி கொட்டுதலுக்கு இலக்கான அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெல்கொல்ல பகுதியிலிருந்த கெந்தகொல்லவிற்கு உரம் ஏற்றுவதற்கு சென்ற நிலையிலேயே இவ்வாறு குளவி கொட்டுதலுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவி கொட்டுதலுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கெந்தகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.