கொரோனா வைரஸ் குறித்து உரிய விசாரணைகள் அவசியம் – கொழும்பு பேராயர்

200 0

கொரோன வைரஸ் எவ்வாறு உருவானது என்பதை கண்டுபிடித்து உறுதி செய்வதற்காக உரிய விசாரணைகள் இடம்பெறவேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கந்தானை சென் செபஸ்டியன் தேவாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஆராதனையின்போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகலாவிய தொற்று தானாக உருவானது என மக்கள் கருதமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் சூழலை அளிப்பதும் மோசமான வறுமையும் கரிசனைக்குரிய விடயங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளம் என்பது சமூகத்தின் சிறிய குழுவினரின் கரங்களிலேயே காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸ் வறிய மக்களை மோசமாக பாதித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.