றொபின் அறக்கட்டளை நிதியம்

294 0

ஈழ வரலாற்றில் வடமாகாண மாணவர்களின் கல்வி நிலை கடந்தகாலங்களில் பெரும் சாதனைகளை படைத்த வரலாறு நாம் அறிந்த மகிழ்ச்சியான விடயமாகும்.

குறிப்பாக கடினமான யுத்தகாலத்திலும் நமது மாணவர்களின் சொத்தாக நிலைத் திருந்தது கல்வியே ஆகும். ஆனால் தற்போது ஈழத்தில் கல்வியில் மிகவும் பின் தங்கிய மாகாணமாக வடமாகாணம் விளங்குவது மிகவும் வேதனையை தருகின்றது.

மாணவர்கள் மத்தியில் கல்விமற்றும் ஒழுக்க விடயங்களில் அக்கறை காட்ட வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் எல்லோரும் உள்ளோம்.

இன்று குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் க.பொ.த சாதாரணதர தரத்தில் கல்விகற்கும் மாணவர்களில் அதிகமானவர்கள் கணிதம்,விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலபாடங்களில் சித்தியடையாத நிலையில்

 

தமது உயர்தர கல்வியை தொடரமுடியாத நிலையில் உள்ளார்கள்.

சில மாணவர்கள் கா.பொ.த. சாதாரணபரீட்சையில் தோற்றி சித்தியடையாது தமது கல்விப்பயணத்தை இடைநிறுத்தும் நோக்கோடும், எவ்வாறு தமது பயணத்தைதொடர்வது என திசைதெரியாமலும் தவிக்கிறார்கள். இவர்கள் வாழ்வில் கல்விப்புலம் நிச்சயம் உதவிசெய்யவேண்டும்.

இன்று யுத்தம் முடிவடைந்துவிட்டது என்பது நேரடியாக உலகம் காணும் மாயை ஆனால் சத்தம் இல்லாத யுத்தம் தினமும் வன்னியில் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் மூப்பது வருட கால யுத்தத்தின் வடுக்களை தங்களில் சுமந்து கொண்டே மக்கள் தங்கள் வாழ் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று எமது மக்கள் பல்வேறுபட்ட முரண்பாடுகளோடும்,  உடல்,உளரீதியான நோய்களோடும், குடும்ப பிரிவினைகளோடும், வறுமையோடும்,போதைபொருள் பாவனையோடும் வாழ்ந்து வருவது கண்கூடு.

 

இந் நிலையில் கல்வியை தொடர வசதியற்ற மாணவர்களுக்கு உதவும் நோக்கில் றொபின் அறக்கட்டளை நிதியம் செயற்பட்டு வருகின்றது.

இதன் மூலமாக மாணவர்களை ஊக்குவித்து எமது வருங்கால சந்ததியின் கல்வியினை மேம்படுத்த நாம் யாவரும் ஒன்றிணைத்து பயணிப்போம்.

தொடர்புகளுக்கு: : robincharityfund@gmail.com