மனித குலத்தின் மீது கொண்ட மாசற்ற அன்பின் காரணமாக மனிதனாய் மண்ணில் அவதரித்த இயேசு பாலன்

284 0

நத்தார் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவதாகும். நத்தார் இந்த ஆண்டின் மிகவும் மகிழ்ச்சியான பண்டிகைகளில் ஒன்றாகும், இது குழந்தைகள் மற்றும் வளர்ந்தவர்கள் உட்பட அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது என வட மாகாண ஆளுநர் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக இது குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் செலவழிக்கும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் விலைமதிப்பற்ற நேரம் பற்றியது. மனித குலத்தின் மீது கொண்ட மாசற்ற அன்பின் காரணமாக மனிதனாய் மண்ணில் அவதரித்த இயேசு பாலனின் நல்லாசியுடன் நத்தார் புதுவருட வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு,

மக்கள் அனைவரும் நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பேணி குடும்பத்தினருடன் ஒற்றுமையாய் மகிழ்வுடன் கொண்டாடுமாறு கேட்டுகொள்வதுடன் நாட்டு மக்கள் அனைவருக்கும் இயேசு பாலகனின் ஆசியும் அன்பும் கருணையும் கிடைப்பதற்கு வேண்டி நிற்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந் நத்தார் பண்டிகை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வுகளை ஊக்குவிக்கிறது. சமூகம் ஒன்றிணைந்து வளமான மற்றும் அமைதியான புத்தாண்டிற்காக பிரார்த்தனை செய்யும் காலம் இதுவாகும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உங்கள் அருகிலுள்ள மற்றும் அன்பானவர்களை இந்த நாளில் சந்திப்பது கடினம், ஆனால் இது எந்தவிதத்திலும் இப்பண்டிகையின் மகிழ்ச்சியைப் பாதிக்கக்கூடாது. நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் என்னுடைய மகிழ்ச்சியான நத்தார் மற்றும் புதுவருட நல்வாழ்த்துக்கள்.