அரசியல் கைதிகள் விடுவிப்பு விவகாரம் : தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் விடுத்துள்ள கோரிக்கை!

271 0

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கும் விடயத்தில், அனைத்து தரப்பினரும் ஒரே நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் இன்பம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.