ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தால், ஐக்கிய தேசியக் கட்சியை உடைப்பதற்கே முயற்சிக்க வேண்டுமே தவிர தனது சொந்தக் கட்சியை உடைக்க முயற்சிக்க கூடாது என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு எதிர்க் கட்சிக்குள்ள ஒப்பந்தங்கள் பல்வேறு வழிமுறைகளில் வெளிப்படுகின்றது.
கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்களின் வழக்குகள் தள்ளுபடி செய்யும் போது, வெளிநாட்டு விஜயங்களில் பங்கெடுக்கும் போதும், சிறையில் உள்ளவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போதும் இந்த ஒப்பந்தம் என்னவென்பது விளங்குகின்றது.
கூட்டு எதிர்க் கட்சியின் செயற்பாடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிரானது என்பது தெளிவானது எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.