மதீனாவில் தற்கொலை தாக்குதல்

4898 15

17775_madinaஇஸ்லாமியர்களின் புனித நகரான சவுதி அரேபியாவின் மதீனாவில் தற்கொலைத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

மதீனாவில் உள்ள புனித பள்ளிவாசலுக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தற்கொலைதாரி புனித பள்ளிவாசலுக்குள் பிரவேசித்து குண்டை வெடிக்க செய்ய முற்பட்ட போதும், அவர் அதற்கு முன்னதாகவே தடுக்கப்பட்டுள்ளார்.

இதனால் பள்ளிவாசலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகளே நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Leave a comment