விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் ஒரே இடத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஒரே இடத்தில் வைத்து பயிற்சி கொடுக்கப்பட்டது.
இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான பயிற்சியினையும் ரஸ்யயாவே வழங்கியது.
எனினும் முடிந்தவரையில் இவர்கள் இரு தரப்பினரையும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளாத வகையில் பார்த்துக் கொள்ளப்பட்டது.
ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் நேராகவும் சந்தித்துக் கொண்டார்கள்.
இதனால் இந்த விடயம் வெளிப்படையாகிப்போனது. இதனைப்பற்றி இது வரையிலும் அரசு ஒன்றையுமே தெரிவிக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
அதனால் பிரச்சினைகளின் அடி எதுவென கண்டறியப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.