அவர்கள் ரிஷானாவை காப்பாற்றவில்லை: நாம் பிறிதொரு பெண்ணை காப்பாற்றினோம்

334 0

1122249665untitled-2தற்போது வரை சுமார் 15 இலட்சம் இலங்கையர்கள் வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்விக்காகவே இவ்வாறு சென்றுள்ளதாகவும், அவர்களில் அதிகமானவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் தலதா அதுகோரல மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளான ரிஷான நபீக்கை கடந்த ஆட்சிக் காலத்தில் காப்பாற்ற தவறியதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதுபோன்று மரண தண்டனைக்கு இலக்கான மற்றுமொரு இலங்கைப் பெண்ணை தற்போதைய ஆட்சியில் காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தனக்கு எதிராக குற்றம்சாட்டும் நபர்கள், இது பற்றி பேசுவதில்லை எனவும் அவர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.