சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தம்

209 0

சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம், 2021 ஜனவரி முதல் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும். அதாவது, திறந்த வெளி பொது இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு ஒரு தனிக் கட்டணம், 500 பேருக்குக் குறைவான கூட்டம் என்றால் 5,000 ரூபாய், 501 முதல் 1000 பேர் வரை கூட்டம் என்றால் 10 ஆயிரம் ரூபாய், 1,000 பேருக்கு மேல் கூட்டம் என்றால் 20 ஆயிரம் ரூபாய் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளதாவது, திட்டக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் முதல்வர் அறிவுறுத்தலின்படி நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்தார்.