அடுத்த இரு ஆண்டுகளில் கண்ணிவெடியற்ற நாடாக இலங்கை மாறும் : இராஜாங்க அமைச்சர் இந்திக

203 0

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கிராமப்புற வீட்டு வசதி, உட்கட்டுமான மற்றும் கட்டிட கைத்தொழில் துறை இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த நேற்று தெரிவித்தார்.


கிளிநொச்சி, முகமாலைப் பகுதிக்கு கண்காணிப்பு சுற்றுப்பயணத்தை நேற்று மேற்கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.


கண்ணி வெடி அகற்றும் திட்டம் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்காக அரசாங்கம் அடுத்தாண்டு பாதீட்டில் 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவதற்கும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத் துவதற்கும் 7,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் கூறினார்.