மஹர சிறை மோதல் – இறுதி அறிக்கை 30 ஆம் திகதி

219 0

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முழு அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு கையளிக்கப்படவுள்ளது.

கடந்த தினம் மஹர சிறை மோதல் தொடர்பில் ஆராய்வதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரியினால் குறி்த குழு நியமிக்கப்பட்டது.

இதன் தலைவராக ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவரத்ன நியமிக்கப்பட்டார்.

சிறைச்சாலை மோதலுக்கான காரணம் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை சமர்ப்பிப்பது குறித்த குழுவின் பணிகளாகும்.

அதன்படி, அவர்கள் சிறைச்சாலைக்கு சென்று அங்கு கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துக் கொண்ட நிலையில், பின்னர் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளிடம் மற்றும் வேறு தரப்பினரிடம் வாக்குமூலம் பதிவு செய்துக் கொண்டனர்.

இதன்போது, குறுகிய காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த தினம் குறித்த குழுவால் அறிக்கையொன்று கையளிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த மோதல் சம்பவம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட முழு அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.