அத்துமீறல் மற்றும் சட்டவிரோத தொழில்களில் இருந்து வடக்கின் கடல் வளத்தினை பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டிணை வடமாகாண கடல் வளப் பாதுகாப்ப ஆண்டாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், வடமாகாண மீன்பிடி அமைச்சு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் வடமாகாண கடற்றொழில் சமூகத்தினரை இணைத்து வடமாகாண மீன்படி அபிவிருத்திக்கான இணை முகாமைத்துவ செயற்றிட்டம் இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள ரில்கோ கோட்டலில் வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இவ்வாறு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டள்ள வடமாகாண மீன்படி அபிவிருத்தி இணை முகாமைத்துவ செயற்பிட்டத்தின் ஊடாகவே இப்பிரகடணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பிரகடணத்தினை நடமுறைப்படுத்துவதற்க வடமாகாண சபை மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்ப இயக்கம் என்பன இணைந்து செயற்படும் என்றும், இதன்படி பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்துரங்குகள் மற்றும் வேலைத்திட்டங்களையும் அடுத்த ஆண்டு முதல் முன்னெடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.