அண்டார்டிகா கண்டத்தையும் விட்டுவைக்காத கொரோனா!

242 0

அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் கொரோனாத் தொற்றினால்  பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இக் கண்டத்தில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லை என்றாலும், 1,000 ஆராய்ச்சியாளர்களும் பிற பணியாளர்களும் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இங்குள்ள 36 ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று  உறுதியாகியுள்ளது. அண்டார்டிகா பகுதியிலிருந்து திரும்பிய அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிலியிலுள்ள புன்டா அரினாஸ் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அண்டார்டிக்கிலுள்ள அனைத்து முக்கிய ஆராய்ச்சி திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளதன் விளைவாக, உலகெங்கிலுமுள்ள விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி தடைபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.