நடப்பாண்டில் சமூக வலையமைப்பு தொடர்பில் அதிமான முறைப்பாடு

322 0

images-1நடப்பாண்டின் கடந்த மாதங்களுக்கு சமூக வலையமைப்பு தொடர்பில் 2100க்கும் அதிமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை அணி தெரிவித்துள்ளது.அதில் பேஸ்புக் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன்இ டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தொடர்பிலும் முறைப்பாடு கிடைத்துள்ளது.

பாதுகாப்பாக இணையத்தளம் பயன்படுத்துவது தொடர்பில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்டு வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கை அணி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.கல்வி அமைச்சின் உதவியின் கீழ் மாகாண மட்டத்தில் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.