தைவானில் 8 மாதங்களுக்கு பின்னர் முதன்முறையாக கொரோனா பாதிப்பு!

232 0

உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரசின் தீவிர பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன. எனினும், ஒரு சில நாடுகளில் கொரோனா தொற்று குறைவாகவும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டும் காணப்படுகின்றன.

அந்தவகையில் தைவானில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக உள்ளூரை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு ள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இதனை அடுத்து குறித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த 167 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூர் மக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கைகளை எடுத்து கொள்ளும்படியும், அறிகுறிகள் தென்பட்டால் சுகாதார அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கும்படியும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுதவிர பிலிப்பைன்ஸிலிருந்து தைவானுக்கு வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால், தைவானில் செவ்வாய் கிழமை வரை 770 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் 632 பேர் குணமடைந்துள்ளதுடன் 131 பேர் சிகிச்சையிலுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.