டொனால்ட் டிரம்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பென்டகனில் பெரும் குழப்பம்

207 0

டொனால்ட் டிரம்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென ஊகிக்க முடியாத நிலையில் உள்ளதால் பென்டகனில் குழப்பநிலை காணப்படுவதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராணுவம் தனது பிரதான தளபதி விலகிச்செல்வதை பார்ப்பதற்கு இன்னமும் ஒரு மாதகாலம் உள்ள நிலையில் எஞ்சியிருக்கின்ற நாட்களில் டிரம்ப் என்னசெய்வார் என்ற பதற்றநிலை பென்டகனில் காணப்படுகின்றது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஈரான்மீதான தாக்குதல் போன்ற எதிர்பாராத நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு டிரம்ப் உத்தரவிடுவாரா? தேர்தல்முடிவுகளை மாற்றியமைக்கும் தனது முயற்சிக்கு இராணுவத்தினரை பயன்படுத்த முயல்வாரா என்ற கேள்வி பென்டகனில் காணப்படுகின்றது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் தாங்கள் தலையிடப்போவதில்லை என வெளிப்படையாக அறிவிக்கும் வழமைக்கு மாறான நடவடிக்கையில் இராணுவ அதிகாரிகள் இறங்கியுள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
அவர் என்ன செய்வார் என்பது தெரியவில்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் வழமைக்கு மாறாhன நிலையில் உள்ளோம் என பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டிரம்ப் உத்தரவிடக்கூடிய நடவடிக்கைகள் என தாங்கள் கருதுபவற்றினை அதிகாரிகள் பட்டியலிட்டு வருகின்றனர் என ஒருவர்தெரிவித்துள்ளார்.

டிரம்ப் பலரை வலுக்கட்டாயமாக இராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்ளக்கூடும் என்ற அச்சமும் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.