21 கொரோனா நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் – சுகாதாரப் பிரிவு

190 0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 21 பேர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொதுச் சுகாதார பிரிவின் காரியாலயம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 768 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களில் 21 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேநரம், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்தார்.

அத்துடன் நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப் பிறப்பை பொருட்படுத்தாமல், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளைக் கருத்திற்கொள்ளாது கொரோனா தொற்று நோயாளர்களைக் கண்காணிப்பதில் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண ஊழியர்கள் வரை முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.