குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலிருந்து விலகுவோன் – விமல் வீரவன்ச

292 0

downloadதனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விடை பெறுவதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தனது விமான கடவுச்சீட்டு தொடர்பில் உள்ள பிரச்சினையின் போது பிரதமரிடம் உதவி கோரியதை நிரூபிக்குமாறு வீரவன்ச கேட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது பொலிஸ் அரசாங்கம் ஒன்றே செயற்படுகிறது. கைது செய்யப்படுவதனை தடுப்பதற்காக பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் ஒருவர் வழங்கிய தொலைப்பேசி அழைப்பினை அதற்கான உதாரணமாக சுட்டிக்காட்ட முடியும்.

கடந்த அரசாங்கத்தின் போது பொலிஸாருக்கு இவ்வாறான அழுத்தம் ஒன்று பிரயோகிக்கப்படவில்லையா என விமலிடம் வினவிய போது, கடந்த அரசாங்கத்தின் போது அவ்வாறான அழுத்தம் ஒன்று பிரயோகிக்கப்பட்ட சந்தர்ப்பத்தை வெளிப்படுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சஇ முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு அழைப்பேற்படுத்திய சம்பவம் பொலிஸாருக்கு பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் இல்லையா என விமலிடம் வினவப்பட்டுள்ளது.

பொலிஸார் வன்முறையாக நடந்துக் கொள்வதனை தடுப்பதற்காக மாத்திரம் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது. மோதல் ஒன்று ஏற்படுவதனை தடுப்பதற்காக தான் அப்போதைய பாதுகாப்பு செயலாளருக்கு தொலைப்பேசி அழைப்பு மேற்கொண்டதாகவும், சட்டத்திற்கு மேலான ஒன்றும் மேற்கொள்ளப்படவில்லை என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.